ADDED : ஏப் 10, 2024 05:18 AM

சென்னை : சென்னை எழும்பூர் - திருநெல்வேலி உட்பட மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலியில் இருந்து வரும் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் மாலை 6:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:10க்கு திருநெல்வேலி சென்றடையும்
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றும், 17, 24ம் தேதிகளிலும் மாலை 3:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:45 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி சென்றடையும்
கொச்சுவேலியில் இருந்து வரும் 11, 18, 25ம் தேதிகளில் மாலை 6:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:40க்கு சென்னை சென்ட்ரல் வரும்
ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதியில் இருந்து வரும் 18, 27ம் தேதிகளில் இரவு 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாளில் காலை 9:30 மணிக்கு கோவை செல்லும்
கோவையில் இருந்து வரும் 22, மே 1ம் தேதிகளில் அதிகாலை 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த 3வது நாளில் காலை 11:30க்கு பகத் கீ கோதிக்கு செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

