ADDED : ஜூலை 09, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், இந்திய அணுமின் கழகத்திற்கு அணுமின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அந்த மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக, மே 13ம் தேதி, அதிகாலை 5:28 மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பணி முடிவடைந்ததை அடுத்து, அந்த அணு உலையில் இரு மாதங்களுக்கு பின், நேற்று காலை 5:04 மணி முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

