
மார்ச் 23, 1951
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகில் உள்ள இளஞ்செம்பூரில் ராமமூர்த்தி - திருக்கம்மல் தம்பதிக்கு மகனாக, 1951ல் இதே நாளில் பிறந்தவர்முனுசாமி எனும் செந்தில்.
இவர், தன் சொந்த ஊரில்ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். தந்தை திட்டியதால், 12வது வயதில், வீட்டை விட்டு வெளியேறி, சென்னை வந்தார். எண்ணெய் ஆட்டும் நிலையம், மதுக்கடை உள்ளிட்ட இடங்களில் வேலை பார்த்தார். நாடகங்கள் வழியாக திரைத்துறையில் நுழைந்தார்.
மலையூர் மம்பட்டியான் படத்திற்கு பின் முக்கிய வேடங்களை ஏற்றார். வைதேகி காத்திருந்தாள் படத்தில், கவுண்டமணியுடன் இணைந்தார். இந்த நகைச்சுவை ஜோடி மிகவும் பிரபலமானது.
நான் பாடும் பாடல், உதய கீதம், கரகாட்டக்காரன், ஜென்டில்மேன், சின்னக்கவுண்டர், இந்தியன், ஜெய்ஹிந்த் என, இவர்களது வெற்றிப்படங்களின் வரிசை நீண்டது.
அ.தி.மு.க., - அ.ம.மு.க., - பா.ஜ., என, அரசியல் களத்திலும் வலம் வருகிறார். அடி வாங்கியே ரசிகர்களை சிரிக்க வைத்தவரது, 73வது பிறந்த தினம் இன்று!

