
மார்ச் 27, 2005
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், எம்.ஏ.டேனியல் நாடார் - தெரேசா செல்லம்மாள் தம்பதியின் மகனாக 1923, ஆகஸ்ட் 11ல் பிறந்தவர் ரஞ்சன்ராய் டேனியல்.
இவர், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ பள்ளி மற்றும் கல்லுாரி, சென்னை லயோலா கல்லுாரி, சென்னை பல்கலைகளில் படித்தார். வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில் எம்.எஸ்சி., இயற்பியல் படித்தார்.
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில், இயக்குனராக பணியில் சேர்ந்தார். பிரிட்டனின் பிரிஸ்டால் பல்கலைக்கு இந்திய அரசின் உதவித்தொகையுடன் ஆய்வாளராக சென்றார். அணுக்கரு பிளவு பற்றி ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றார்.
இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உதவித்தொகையுடன் ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து விஞ்ஞானியானார். பிரதமர் இந்திராவின் முதன்மை ஆலோசகராகவும், ஹோமி பாபாவின் அணுக்கரு அறிவியல் ஆய்வாளராககவும் பணியாற்றினார்.
'பத்ம பூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 82வது வயதில், 2005ல் இதே நாளில் மறைந்தார். இந்திய கதிரியக்க அறிவியல் விஞ்ஞானி மறைந்த தினம் இன்று!

