
ஏப்ரல் 1, 1861
திருநெல்வேலியில், நெல்லையப்பரின் மகனாக, 1861ல் இதே நாளில் பிறந்தவர் டி.என்.சிவஞானம் பிள்ளை.
இவர், திருநெல்வேலியின், மதுரை திரவியம் தாயுமானவர் ஹிந்து கல்லுாரி, சென்னை கிறிஸ்துவ கல்லுாரி, சென்னை சட்டக் கல்லுாரிகளில் படித்தார். வழக்கறிஞராக பணியாற்றியவர், குடிமைப்பணி தேர்வெழுதி, துணை கலெக்டரானார்.
பணி ஓய்வுக்கு பின், நீதிக்கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ., ஆனார். அப்போது, பனகல் ராஜா, தமிழர்களை புறக்கணிப்பதாக புகார் எழுந்த நிலையில், கூர்மா வெங்கடா ரெட்டி நாயுடு வகித்த சென்னை மாகாண வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இதன் வாயிலாக, சென்னை மாகாணத்துக்கு தேர்வான முதல் தமிழ் அமைச்சர் என்ற சிறப்பை பெற்றார்.
வைஸ்ராய் இர்வின் பிரபுவால், 'நைட்' பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். சுதந்திரத்துக்கு பின், சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை கமிஷனரானார். சிறந்த விளையாட்டு வீராங்கனையான இவரது மனைவி சுப்பம்மாள், தென் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியனாக திகழ்ந்தார். சிவஞானம், தன் 75வது வயதில், 1936ல், ஜூன் 13ல் மறைந்தார். திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்க தலைவராக இருந்தவரின் பிறந்த தினம் இன்று!

