
ஏப்ரல் 20, 1908
திண்டுக்கல் மாவட்டம், பழனியில், முத்தையா பிள்ளை - உண்ணாமலை தம்பதியின் மகனாக, 1908ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. இவர், தன் தந்தையிடமும், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையிடமும் மிருதங்கம் கற்றார்.
இடது கையால் வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். கர்நாடக சங்கீத மேடையின் நடுவில் பாடகர், வலது பக்கம் மிருதங்கம், இடது பக்கம் வயலின் கலைஞர்கள் அமர்வது தான் வழக்கம்.
இவரது இடக்கை பழக்கத்தை, துவக்கத்தில் வயலின் கலைஞர்கள் எதிர்த்தனர். என்றாலும் தன் வாசிப்பு திறமையால் எதிர்ப்பை கடந்தார். தன் 20 வயதுக்குள்ளேயே முன்னணி பாடகர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்தார்.
தொடர்ந்து, செம்பை வைத்தியநாத பாகவதர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், செம்மங்குடி சீனிவாச அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி அய்யர் உள்ளிட்ட பாடகர்களும் இவரை அமர்த்திக் கொண்டனர். கஞ்சிரா வாசிப்பிலும் புகழ் பெற்ற இவர், தன் 54வது வயதில், 1962 மே 27ல் மறைந்தார்.
'லய மேதை' பிறந்த தினம் இன்று!

