
ஏப்ரல் 25, 1911
சோழவந்தான் வரதராஜன் - லட்சுமி தம்பதியின் மகனாக 1911ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். தன் 3வது வயதில் தந்தையை இழந்தார். தன் 10வது வயதில், நாடகங்களில் நடிக்க துவங்கி, அங்கேயே பாடவும், இசையமைக்கவும் கற்றார். இவர் ஐந்து படங்களில் நடித்தார். ஒரு சண்டை காட்சியில் இடது கை ஒடிந்ததால், நடிப்பை விட்டு பெங்களூரு சென்றார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார், நந்தகுமார் திரைப்படத்தில் இவரை இசையமைப்பாளராக்கினார். பல படங்களுக்கு இசையமைத்த இவர், அந்நிறுவனத்துடன் மனஸ்தாபம் ஏற்பட்டு விலகினார். நடிகை கண்ணாம்பாள் சிபாரிசில், 'கண்ணகி' படத்துக்கு இசையமைத்து மீண்டும் வலம் வந்தார்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மற்றும் என்.டி.ஆர்., ஆகிய முதல்வர்களுடனும், எம்.எஸ்.வி., டி.கே.ராமமூர்த்தி உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடனும், பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், ஜி.என்.பாலசுப்பிரமணியன், எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.எம்.சவுந்தரராஜன், எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட பாடகர்களுடனும் பணியாற்றினார். பக்தி பாடல்களுக்கும் இசையமைத்த இவர் தன், 87வது வயதில், 1998, ஏப்ரல் 7ல் மறைந்தார்.
'காற்றினிலே வரும் கீதம்...' உள்ளிட்ட பாடல்களால் வாழும் எஸ்.வி.வி., பிறந்த தினம் இன்று!

