
மே 28, 1923
தஞ்சாவூரில், மிருதங்க வித்வான் மகாலிங்கம் பிள்ளை - சீதாலட்சுமி தம்பதியின் மகனாக, 1923ல் இதே நாளில் பிறந்தவர் டி.எம்.தியாகராஜன். இவரது கொள்ளு தாத்தா பரோடா அரண்மனையில் ஆஸ்தான சங்கீத வித்வானாக இருந்தார். இவர் சிறுவயதில், தன் தந்தையிடம் கர்நாடக இசை கற்றார்.
தொடர்ந்து, செம்மங்குடி சீனிவாச அய்யரிடம் குருகுல வழியில் இசை கற்றார். தன் 8 வயதில் கச்சேரி செய்தார். மேடை கச்சேரிகள் மட்டுமின்றி, வானொலி, தொலைக்காட்சியிலும் கச்சேரிகள் செய்தார். அரசு இசை கல்லுாரி ஆசிரியராக சேர்ந்து, துறை தலைவராக ஓய்வு பெற்றார். மியூசிக் அகாடமியிலும் தலைவராக பணியாற்றிய இவர், 'திருப்பாவையும் திருவெம்பாவையும், இசை ஒலிக்குறிப்பு, இசை மலர்க்கொத்து, கீத மாலிகா, கீத சங்கமம், முருக கானம்' உள்ளிட்ட இசை கோவைகளையும் வெளியிட்டார். 'கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 84வது வயதில், 2007ல், ஜூன் 27ல் மறைந்தார்.
பாடகர், கவிஞர், ஆசிரியர் எனும் பன்முக கலைஞர் பிறந்த தினம் இன்று!