sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : மே 29, 2024 09:32 PM

Google News

ADDED : மே 29, 2024 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 30, 1903

ஆந்திர மாநிலம், நெல்லுாரில், தெலுங்கு பிராமண குடும்பத்தில், 1903ல் இதே நாளில் பிறந்தவர் எறகுடிப்பட்டி வரதராவ் எனும் ஒய்.வி.ராவ். இவர், மும்பையில் படித்தார்.

சென்னைக்கு வந்து, மேடை நாடகங்களை இயக்கி, நடித்தார். சிவகங்கை நாராயணன் தயாரித்து, ரகுபதி பிரகாஷ் இயக்கிய, கருட கர்வபங்கம் எனும் மவுன படத்தில் கதாநாயகனானார். தொடர்ந்து, 'கஜேந்திர மோட்சம், ரோஸ் ஆப் ராஜஸ்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பாண்டவ அஞ்ஞாதவாசா, ஹரி மாயா உள்ளிட்ட மவுன படங்களை இயக்கினார். கன்னடத்தின் முதல் பேசும் படமான, சதி சுலோச்சனா என்ற படத்தை இயக்கி, பேசும்பட இயக்குனரானார். ஹரி மாயா என்ற படத்தில் தன் மனைவி ராஜத்தை நடிக்க வைத்து இயக்கினார். லவங்கி என்ற படத்தை இயக்கி, அதில் நாயகியாக நடித்த குமாரி ருக்மணியையும் மணந்தார்.

இவர் இயக்கிய, சிந்தாமணி படத்தில் நடித்த தியாகராஜ பாகவதர் பெரும் புகழ் அடைந்தார். தயாரிப்பு, படத்தொகுப்பு, வினியோகம் உள்ளிட்டவற்றையும் செய்த இவர், 1973, பிப்ரவரி 13ல் தன், 70 வயதில் மறைந்தார்.

நடிகை லட்சுமியின் தந்தை பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us