
ஜூன் 10, 1972
மதுரையில், ரகுநாத பிச்சை - லட்சுமி தம்பதியின் மகனாக, 1972ல் இதே நாளில் பிறந்தவர் சுந்தர் பிச்சை.
இவர், சென்னையில் ஜவஹர் வித்யாலயா, வனவாணி பள்ளிகளிலும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் உலோக பொறியியலும் படித்தார். கலிபோர்னியாவின் ஸ்டான்ட்போர்ட் பல்கலையில் பொருளறிவியல் பட்டமும், பென்சில்வேனியா வார்ட்டன் மேலாண்மை பல்கலையில் எம்.பி.ஏ.,வும் முடித்தார்.
மெக்கன்சி நிறுவனத்தில் மேலாண்மை துறையில் பணி செய்த இவர், 2004ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். திட்டமிடலில் புதுமை, கூட்டாண்மை முயற்சிகளால் அதன் தலைமை செயல் அதிகாரியானார். பின், ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் தலைவரானார்.
கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக செயல்பட்டார். அதன் கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகிறார். இந்தியாவின் உயரிய விருதான, 'பத்ம பூஷண்' பெற்ற இவர், இன்று 52வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.
இந்திய ஐ.டி., இளைஞர்களின் எழுச்சி நாயகன் பிறந்த தினம் இன்று!

