
செப்டம்பர் 4, 1894
ஜார்க்கண்ட் மாநிலம், கிரிஹ்தியில் ராம் சந்திர கோஷின் மகனாக, 1894ல் இதே நாளில் பிறந்தவர் ஞான் சந்திர கோஷ். இவர், கிரிஹ்தி உயர்நிலைப் பள்ளி, கோல்கட்டா மாநிலக் கல்லுாரிகளில், எம்.எஸ்சி., வேதியியல் படித்தார்.
ராஜா பஜார் அறிவியல் கல்லுாரியின் வேதியியல் துறை விரிவுரையாளரானார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனராகி, அங்கு, 'ஏரோநாட்டிகல், இன்டர்னல் கம்பல்ஷன், மெட்டலர்ஜி, ஹை வோல்டேஜ்' உள்ளிட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படிப்புகளை அறிமுகம் செய்தார்.
இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உறுப்பினராகி, தொழில்நுட்ப கல்வியை நவீனப்படுத்தினார். காரக்பூர் ஐ.ஐ.டி.,யின் முதல் இயக்குனராகி, அதை உயர்த்தினார். கோல்கட்டா பல்கலை துணைவேந்தர், ஐந்தாண்டு திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, 'பத்ம பூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர் 1959, ஜனவரி 21ல் தன், 65வது வயதில் மறைந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியை அறிவியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திய, விஞ்ஞானி ஜெ.சி.கோஷ் பிறந்த தினம் இன்று!