வேளாண் பல்கலையில் பட்டயப் படிப்புஆன்லைன் கலந்தாய்வு இன்று துவக்கம்
வேளாண் பல்கலையில் பட்டயப் படிப்புஆன்லைன் கலந்தாய்வு இன்று துவக்கம்
ADDED : ஜூலை 11, 2024 09:42 PM
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பட்டயப் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு, இன்று முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு, 2024-- 25ம் கல்வியாண்டுக்கு, மொத்தம் 2,813 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இணையதள கலந்தாய்வு இன்று முதல் மூன்று நாட்கள் (ஜூலை 12, 13, 14) மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது. இணையதள கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இ-மெயில், மொபைல் போன் எண்ணில் அனுப்பப்பட்டுள்ளது.
இணையதள கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். அப்போது, திரும்பப் பெறாத கலந்தாய்வுக் கட்டணமாக 200 ரூபாய், எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள், 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
சேர்க்கை பெற்ற மாணவர்கள், இணையதளம் வாயிலாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை உள்நுழைந்து ஜூலை 12 முதல் 13 மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம்.
கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்ப கல்லுாரி, பாடங்கள் இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும். இதுகுறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கலந்தாய்வு வழிமுறைகள் http://tnagfi.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 என்ற மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்; ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

