ADDED : ஜூலை 04, 2024 06:06 AM

சென்னை:நகராட்சி நிர்வாக செயலர் கார்த்திகேயன் கூறியதாவது:
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களில், அங்கு வசிப்போர் எண்ணிக்கை குறைவு. அதேநேரம், சுற்றுலா பயணியர் வரத்து அதிகமாக இருக்கிறது. அவர்களின் வசதிக்காக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம். நிர்வாக ரீதியாக தரம் உயர்த்தும் பட்சத்தில், சுற்றுலா தலங்களின் கட்டமைப்பை மேம்படுத்த முடியும்.
பழைய விதிப்படி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது, மாநகராட்சியை தரம் உயர்த்துவதில், மக்கள் தொகை, ஆண்டு வருமானத்துக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதற்கான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகியவை தரம் உயர்த்தப்படும். அதேபோல், ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.