ADDED : ஏப் 28, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசன் துவங்கிய நிலையில், மலர் கண்காட்சி, மே மாதம் 17ல் துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேதி மாற்றப்பட்டு, மே 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, முதன்முதலாக, 10 நாட்கள் நடக்கிறது.
இந்நிலையில், மலர்கள் முன்னதாக பூத்துள்ளதால், அவற்றை மாடங்களில் அடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குன்னுார் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சி, மே 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

