ADDED : மார் 13, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:ஊட்டி மலை ரயில் பாதையில், ஹில்குரோவ் - குன்னுார் இடையே கன மழையால், மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் ரயில் தடத்தில் விழுந்துள்ளன. இதனால் நேற்று காலை, 7:10 மணிக்கு புறப்படவிருந்த, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில், மதியம், 2:00 மணிக்கு கிளம்பவிருந்த உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்பதிவு செய்த பயணியரின் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும். விழுந்த பாறை, மண் திட்டுகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.