ADDED : செப் 01, 2024 08:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று(செப்.,01) முதல் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு துவங்குகிறது. நீலகிரி மலைப்பகுதிகளில் கடந்த மாதத்தில் பெய்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் கடந்த ஆக.01 முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மண் சரிவுகள் சரி செய்யும் பணி முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குப்பிறகு இன்று துவங்குகிறது. இதனால் மலை ரயில் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.