ADDED : மார் 28, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். வேட்பு மனுவில் அவரது பெயரில் கையிருப்பு ரூ.86,335 தங்கம் 16 கிராம், இறந்த மனைவி விஜயலட்சுமி பெயரில் 200 கிராம் உள்ளது. 5 கார்கள், 1டிராக்டர் உள்ளது.
அசையும் சொத்தாக ரூ.1 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரத்து 832ம், அசையா சொத்தாக ரூ.8 கோடியே 48 லட்சத்து 29 ஆயிரத்து 545 உட்பட மொத்தம் ரூ.9 கோடியே 69 லட்சத்து 80 ஆயிரத்து 377 சொத்து உள்ளது. கடன் ரூ. 1 கோடியே 52 லட்சத்து 85 ஆயிரத்து 226 என தெரிவித்துள்ளார்.

