ADDED : ஆக 21, 2024 09:12 AM
சென்னை : 'மருத்துவ கல்லுாரிகள், மருத்துவ கல்வி நிறுவனங்களில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்' என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆணையத்தின் செயலர் ஸ்ரீனிவாஸ், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கல்வி வளாகங்களுக்குள் போதை பொருள் இல்லாத சூழலை ஏற்படுத்தவும், அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் வேண்டும். அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், 'நாஷா முக்த் பாரத் அபியான்' என்ற போதை பொருள் இல்லாத தேசம் திட்டத்தின் கீழ், சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பாக, மாணவர் விடுதிகளில், அக்குழுக்களை உருவாக்குதல் அவசியம்.
இதுதொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயல் திட்டங்களை வகுத்து, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த அறிக்கையை, மத்திய சமூக நலத்துறைக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

