பருவ தேர்வு மதிப்பெண் 'எமிஸ்' தளத்தில் பதிய உத்தரவு
பருவ தேர்வு மதிப்பெண் 'எமிஸ்' தளத்தில் பதிய உத்தரவு
ADDED : ஏப் 24, 2024 08:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின், 3ம் பருவ தேர்வு மதிப்பெண்ணை, 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே, பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ மதிப்பெண்களை, எமிஸ் என்ற பள்ளிக்கல்வி ஆன்லைன் தளத்தில், பள்ளிகள் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு பாட வாரியாக மதிப்பெண்களை பதிவிட வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் தேர்வுக்கு, 'ஆப்சென்ட்' ஆனால், அதையும் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

