ADDED : ஜூன் 30, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய, 11 வயது சிறுவன் இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுதும், ஒரு மாதத்தில் சுகாதாரமற்ற குடிநீரால், 10 பேர் பலியானதாக செய்திகள் வந்த நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில், குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக, தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுதும் குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை, அரசும், மாநகராட்சி நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
பழனிசாமி,
அ.தி.மு.க., பொதுச் செயலர்

