sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: பழனிசாமி எதிர்ப்பு

/

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: பழனிசாமி எதிர்ப்பு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: பழனிசாமி எதிர்ப்பு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: பழனிசாமி எதிர்ப்பு

23


ADDED : மார் 12, 2025 05:06 AM

Google News

ADDED : மார் 12, 2025 05:06 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் தி.மு.க., அரசு பணியமர்த்துவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு துறைகளில், 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களில், 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்றும், முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

இப்போது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர்கள், சார்பு, துணை, இணை, கூடுதல் செயலர்கள் நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்க துறைக்கு, மாதம் ஒரு லட்சம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆலோசகராக பணிபுரிய, துணைச் செயலர் பதவி நிலைக்கு குறையாத பதவியில் ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்குமாறு விளம்பரம் வந்துள்ளது.

அரசு வேலைக்காக தவமிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு நடத்தி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் அறிக்கை:

பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஓய்வுபெற்ற பின், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது ஆலோசகர்களின் நியமனங்கள், எவ்வித வரைமுறையும் இன்றி உள்ளன. இவர்களின் ஊதிய நிர்ணயத்திற்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றுப்படுவதில்லை.தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையில், ஆலோசகர் பதவிக்கு ஒரு லட்சம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வாகி வருபவர்களின் முக்கியத்துவம் மற்றும் திறமையையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆலோசகர்கள் வாயிலாக, அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல.ஆலோசகர்களின் அறிவுரைப்படி அரசின் கொள்கை முடிவை மேற்கொள்ளும்போக்கு என்பது, சமூக நீதிக்கு எதிரானது. மத்திய அரசு, இணை செயலர், துணை செயலர், இயக்குனர் நிலையில் 45 பணியிடங்களை, மத்திய அரசு தன்னிச்சையாக நிரப்ப முயற்சித்தபோது, தமிழக அரசு எதிர்த்து குரல் கொடுத்தது.தற்போது, மாநில அரசில் எந்தவித சலனமுமின்றி, ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த போக்கு நீடித்தால், இளைய சமூகத்தின் அரசு வேலை என்ற கனவு சீரழிந்து விடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us