sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆளுங்கட்சியினருடன் தொடர்பில் இருந்தால் நடவடிக்கை; அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பழனிசாமி எச்சரிக்கை

/

ஆளுங்கட்சியினருடன் தொடர்பில் இருந்தால் நடவடிக்கை; அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பழனிசாமி எச்சரிக்கை

ஆளுங்கட்சியினருடன் தொடர்பில் இருந்தால் நடவடிக்கை; அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பழனிசாமி எச்சரிக்கை

ஆளுங்கட்சியினருடன் தொடர்பில் இருந்தால் நடவடிக்கை; அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பழனிசாமி எச்சரிக்கை


ADDED : மார் 10, 2025 03:27 AM

Google News

ADDED : மார் 10, 2025 03:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''ஆளுங்கட்சி பிரமுகர்களுடன் தொடர்பில் இருக்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியில் இருந்து நீக்கப்படுவர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில் தேர்தல் பணிகளை கவனிக்க, சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பூத் கிளை அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளன.

திண்ணை பிரசாரம்


நேற்று, கட்சியின் 82 மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஆலோசனை நடத்தினார்.

அவருடன், அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலர் முனுசாமி, தலைமை நிலையச்செயலர் வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

கூட்டத்தில் பழனிசாமி பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:


பொதுச்செயலர் பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்தார். அவர் பேசுகையில், தி.மு.க.,வின் தோல்விகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டும். அ.தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதற்கு, திண்ணை பிரசாரத்தை, அனைவரும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். யார் யாரெல்லாம் திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறீர்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப்படும்.

கட்சிப் பணிகளில் அனைவரும் தீவிரம் காட்டினால் தான், தேர்தலில் அது நல்ல பலனை கொடுக்கும்.

அதனால், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி செயல்படுவோர் யார் யார் என்பதெல்லாம் கணக்கெடுக்கப்பட்டு, தேர்தல் நேரத்தில் 'சீட்' கொடுக்கும்போது கவனத்தில் கொள்ளப்படும். அதனால், அனைவரும் தீவிரமாக கட்சிக்காக களப் பணியாற்ற வேண்டும்.

சட்டசபை தேர்தலுக்கு, பூத் கமிட்டி அவசியம். எனவே, அனைத்து பூத்துகளிலும், கமிட்டி அமைக்கப்பட்டு, அது குறித்த விபரங்களை, கட்சி தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு, தேர்தல் பணிகளில் ஒரு போதும் சுணக்கம் காட்டக்கூடாது. தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை


கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், அதை மறந்து, அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

திருச்சி, துாத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட நிர்வாகிகள், ஆளுங்கட்சி பிரமுகர்களுடன் தொடர்பில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. இவை குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக அதுபோல் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் தயவு தாட்சண்யமின்றி கட்சியில் இருந்து நீக்கப்படுவர்.

குறிப்பாக, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் முறையாக இல்லை. கட்சிப் பணிகளில் தொய்வு உள்ளது. மூத்த கட்சியினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

உள்ளூர் தி.மு.க., அமைச்சருடன் தொடர்பு வைத்துள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அப்படிப்பட்டவர்களை கட்சியில் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. நான் குறிப்பிடும் எல்லா விஷயங்களுக்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

அ.தி.மு.க., யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் உள்ளது. கூட்டணியை கட்சி தலைமை முடிவு செய்யும். அதுவரை நிர்வாகிகள் தேர்தல் கூட்டணி குறித்து பேச வேண்டாம். கட்சிப் பணிகளை சிறப்பாக செய்யுங்கள்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழையுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு, உடனடியாக நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.

இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.

வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியை, சில மாவட்ட நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் நேரடியாக பகிர்ந்தனர். இதை, கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் கண்டறிந்து, அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us