பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம் மே 21ல் நடுப்பகுதி சென்றடையும்
பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம் மே 21ல் நடுப்பகுதி சென்றடையும்
ADDED : மே 19, 2024 02:14 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில் துாக்கு பாலம் மே 21 பாலத்தின் நடுவில் சென்றடைய வாய்ப்புள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கி.மீ.,க்கு புதிய ரயில் பாலம் கட்டப்படுகிறது. இதில் 1.6 கி.மீ., க்கு 100 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 500 மீ.,ல் துாண்கள் அமைக்கப்பட்ட நிலையில் பாம்பன் கிழக்கு கடற்கரையில் 700 டன்னில் வடிவமைத்த புதிய துாக்கு பாலத்தை புதிய பாலம் நடுவில் பொருத்த மார்ச் 13ல் லேண்டிங் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் நகர்த்தப்பட்டு வருகிறது.
நேற்றுடன் 66 நாட்களாக நகர்த்தப்பட்டு வரும் நிலையில் பாலம் நடுவில் செல்ல 60 மீ., துாரமே உள்ளது. மே 21 பாலம் நடுவில் துாக்கு பாலம் சென்றடைய வாய்ப்புள்ளது. அதன் பின் ராட்சத கிரேன்கள் மூலம் துாக்கு பாலத்தை புதிய பாலத்தில் பொருத்த இரண்டு மாதங்களாகும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.

