ADDED : மார் 24, 2024 11:28 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மின்விளக்கு எரியாமல்இருளில் மூழ்குவதால்சுற்றுலாப்பயணிகள்,மக்கள் அவதிப்படுகின்றனர்.
பாம்பன் கடலில் 1988ல் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இப்பாலம் வழியாக தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தின் இருபுறமும் 400 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் ஜொலித்து.
காலப்போக்கில் மின் விளக்குகளை பராமரிக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் சேதமடைந்து இருளில் மூழ்கியது.
இதனால் இரவில் பாலத்தில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள், வாகன டிரைவர்கள் விபத்து நடக்குமோ என அவதியில் உள்ளனர். எனவே இங்கு பழுதான மின் விளக்குகளை சீரமைத்து எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

