பன்னீர்செல்வம், விஜயபிரபாகரன் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு
பன்னீர்செல்வம், விஜயபிரபாகரன் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு
ADDED : ஜூலை 19, 2024 12:29 AM

சென்னை: லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்; விருதுநகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்; ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன்; தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன்; முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். விருதுநகர் தேர்தலை எதிர்த்து, மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவரும், விருதுநகர் தொகுதி வாக்காளருமான ஆர்.சசிகுமார் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜயபிரபாகரன், ஆர்.சசிகுமார் நேற்று உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வழக்கை தாக்கல் செய்தனர்.