பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்: 21-ல் அனைத்து கட்சி கூட்டம்
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்: 21-ல் அனைத்து கட்சி கூட்டம்
UPDATED : ஜூலை 15, 2024 11:36 PM
ADDED : ஜூலை 15, 2024 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 முதல் ஆக.12 வரை நடைபெறும் என கடந்த ஜூலை 6-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23 அன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும். இதையொட்டி 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

