ADDED : ஏப் 13, 2024 12:46 AM
சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - கோவை உட்பட ஆறு ரயில்களின் சேவையில், ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
l கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் காலை 6:25 மணி ரயில் வரும் 17, 24ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
l சென்னை சென்ட்ரல் - மைசூரு மதியம் 1:35 மணி ரயில் வரும் 17, 24ம் தேதிகளில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும்
l கோவை - சென்னை சென்ட்ரல் காலை 6:20 மணி ரயில் வரும் 17, 24, 30ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
l சென்னை சென்ட்ரல் - கோவை மதியம் 2:35 மணி ரயில் வரும் 17, 24, 30ம் தேதிகளில் காட்பாடியில் இருந்து புறப்படும்
l மைசூரு - சென்னை சென்ட்ரல் அதிகாலை 5:00 மணி ரயில் வரும் 30ம் தேதி காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
l சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மாலை 3:30 மணி விரைவு ரயில் வரும் 30ம் தேதி காட்பாடியில் இருந்து புறப்படும்
l காட்பாடி - ஜோலார்பேட்டை காலை 9:30 மணி ரயில், ஜோலார்பேட்டை - காட்பாடி நண்பகல் 12:45 மணி ரயில், இன்று மற்றும் 20ம் தேதி ரத்து செய்யப்படுகிறது
l வேலுார் - அரக்கோணம் காலை 10:00 மணி ரயில், அரக்கோணம் - வேலுார் மதியம் 2:50 மணி ரயில் வரும் 17, 24, 26ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

