சந்துரு அறிக்கைக்கு எதிராக தீர்மானம்பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்
சந்துரு அறிக்கைக்கு எதிராக தீர்மானம்பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்
ADDED : ஜூலை 06, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1 கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திறனற்ற தி.மு.க., அரசை கண்டிப்பதுடன், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும்
2 முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வரும் கேரள அரசையும், அதை வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசையும் கண்டிக்கிறோம்
3 ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் சில பிரச்னைகளுக்காக, ஒட்டுமொத்த மாணவர்களின் ஒழுக்கத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டதுதான் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை. ஹிந்து மத அடையாளங்களை மொத்தமாக அழித்தொழிப்பதுடன், சமூகத்தின் அடையாளங்களை அழிக்கும் விதமாக, ஒரு நீதிபதியின் அறிக்கை இருப்பது வேதனைக்கு உரியது.
இவை உள்பட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.