ADDED : ஏப் 19, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, :கோவை மாவட்டம்,சலிவன் வீதியை சேர்ந்தவர் மஞ்சுளா, 40. இவர், கடந்த மாதம் பகுதி நேர வேலை வாய்ப்புக்காக, 'பேஸ்புக்'கில் ஒரு விளம்பரம் பார்த்தார்.
அதில், அவர் தன் விபரங்களை பதிவிட்டபோது, தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் விளம்பரங்களை பார்த்து, அதற்கு கருத்துக்களை பதிவிட்டு லைக் செய்ய கூறியுள்ளார்.
அவற்றை 'ஸ்கிரின் ஷாட்' எடுத்து 'டெலிகிராம் ஆப்'பில் பதிவிட கூறியுள்ளார். அவ்வாறு பதிவிடுவதால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார்.
நம்பிய மஞ்சுளா பல்வேறு தவணைகளாக 7.71 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அதன்பின் பணமும் வரவில்லை; பேசிய மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மஞ்சுளா புகார்படி, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

