'எம்.பி., தொகுதிகளை குறைக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்'
'எம்.பி., தொகுதிகளை குறைக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்'
ADDED : பிப் 26, 2025 06:53 AM

கோவை : மத்திய அரசை கண்டித்து, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கோவை காந்தி பார்க் பகுதியில் நேற்று நடந்தது. காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எம்.பி., தொகுதியை குறைக்கக்கூடாது. இங்கு குறைத்து விட்டு. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அதிகரிக்க வழி செய்கிறார்கள். எம்.பி., தொகுதிகளை குறைக்க, தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழக மக்கள் மீது திணிக்கப்பார்க்கிறது. ஆண்டுதோறும் 1.30 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்துகிறோம். எங்களுக்கான பங்கை கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு வந்த காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கட்சியினர் சிலர் புகார்களை தெரிவித்தனர். அப்போது வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து செல்வப்பெருந்தகை மேடைக்கு நகர்ந்தார்.

