அரசியல் படுகொலைகளால் மக்கள் அச்சம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
அரசியல் படுகொலைகளால் மக்கள் அச்சம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
ADDED : ஜூலை 12, 2024 05:16 AM
திண்டிவனம்: 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி' என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை ஆளும்கட்சி வாரி இறைத்துள்ளது. கப்பியாம்புலியூரில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தி.மு.க.,வினரின் அத்துமீறல்களை தேர்தல் அதிகாரிகள், போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர். இதை அனைத்தையும் மீறி மக்கள் ஆதரவுடன் பா.ம.க., வேட்பாளர் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த அரசியல் படுகொலைகள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அச்சமின்றி வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் எழுத வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உடனிருந்தனர்.

