ADDED : ஆக 21, 2024 01:30 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, மூக்கையூரைச் சேர்ந்த தம்பதி ராமசாமி, 85- - மாரியம்மாள், 80, தங்களை கடைசி காலத்தில் கைவிட்ட மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தருமாறு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்களின் சொத்துக்களை இரு மகன்களுக்கும் தானமாக செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளோம். வயதான காலத்தில் மகன்களால் கை விடப்பட்ட நிலையில் சிரமப்படுகிறோம். இதனால், சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். இதுகுறித்து, பரமக்குடி சப் - கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இதையறிந்த ஒரு மகன் சொத்துக்களை தன்னிச்சையாக விற்கிறார். அவர் மீதும், சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவிற்கு உதவி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.