ADDED : ஜூன் 26, 2024 07:05 AM
சட்டசபையில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்புகள்:
வாழ்விட பாதுகாப்பு, அன்னிய தாவரங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம், கடற்கரைகளை துாய்மைப்படுத்துதல், வன உயிரின கணக்கெடுப்பு, பிளாஸ்டிக் கழிவு அகற்றம், கடல் ஆமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் செலவில், தமிழக பசுமை கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்
மனிதர்கள், விலங்குகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாள்தோறும் நலவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும்
மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து, 100 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும்
சென்னை பெருங்குடி, புதுக்கோட்டை திருக்கட்டளை ஆகிய இடங்களில் உள்ள திடக்கழிவு குப்பை கிடங்குககளில் 4 கோடி ரூபாய் செலவில், வெப்ப புகைப்பட கருவி மற்றும் விஷ வாயு கண்டறியும் சென்சார்கள் நிறுவப்படும்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, ஒவ்வொரு மாதமும் ஒரு வாரம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். அவற்றை மறு சுழற்சி செய்தல் அல்லது சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

