ADDED : மே 02, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
பிரபல பாடகி உமா ரமணன், 69, சென்னை அடையாறில் கணவர் ரமணன் உடன் வசித்து வந்தார்; 6,000க்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாடியுள்ளார்.
பன்னீர் புஷ்பங்கள், நிழல்கள், வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, திருப்பாச்சி
உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் உமா ரமணன் பாடியுள்ளார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று இரவு காலமானார். இறுதிச்சடங்கு இன்று அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நடக்க உள்ளது. உமா ரமணன் மறைவு, இசை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

