பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
UPDATED : மார் 03, 2025 10:10 AM
ADDED : மார் 03, 2025 06:10 AM

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. காலை பள்ளி வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்டு ஆசிரியர்கள் வாழ்த்தினர். 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது. காலை பள்ளி வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து மாணவிகளுக்கு வெற்றி திலகம்
இட்டு ஆசிரியர்கள் வாழ்த்தினர். 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.