தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சென்னை வியாபாரி கொலை, மதுரை கடை சூறை! சட்டம், ஒழுங்கை விமர்சித்த ராமதாஸ்

சென்னை வியாபாரி கொலை, மதுரை கடை சூறை! சட்டம், ஒழுங்கை விமர்சித்த ராமதாஸ்

சென்னை வியாபாரி கொலை, மதுரை கடை சூறை! சட்டம், ஒழுங்கை விமர்சித்த ராமதாஸ்


ADDED : நவ 13, 2024 12:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 12:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை, மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறை என நடந்த சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உணர்த்துவதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்;

சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற பெண் வியாபாரி, மாமூல் தர மறுத்ததால் அவரை பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்திருக்கிறார். அதைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரியும் கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையும், கொலை முயற்சியும் கண்டிக்கத்தக்கவை.

அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் நிலையத்தில் ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்த இனிப்புக்கடையை தி.மு.க., நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன் என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது. சென்னை, மதுரை என தமிழகம் முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் என்பது தான் எழுதப்படாத வரலாறாக உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தான் சென்னையில் பெண் வியாபாரி வெட்டிக்கொல்லப்பட்ட நிகழ்வும், மதுரை திருமங்கலத்தில் தி.மு.க., நகராட்சி உறுப்பினரால் கடை சூறையாடப்பட்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளன.

இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது தான் காவல்துறையின் பணியாகும். ஆனால், காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட தி.மு.க.,வினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படாவிட்டால், அந்த மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தமிழகத்தையும் அப்படி ஒரு மோசமான நிலைக்கு திராவிட மாடல் அரசு தள்ளிவிடக்கூடாது. தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us