சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : செப் 14, 2024 05:48 AM
திட்டக்குடி: சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேல்,29; இவர் 17 வயது சிறுமியை காதலித்து, சில மாதங்களுக்கு முன் திட்டக்குடி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் குடும்பம் நடத்தியதில் சிறுமி கர்ப்பமானார். வயிற்றுவலி ஏற்படவே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கர்ப்பம் கலைந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் மங்களூர் ஒன்றிய ஊர்நல அலுவலர் பரமேஸ்வரி விசாரணை மேற்கொண்டு அளித்த புகாரின் பேரில், மணிவேல் மீது குழந்தை திருமண தடைசட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.