ADDED : ஆக 18, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அருகே மெடிக்கல் ஷாப் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 41; இவர், முருக்கேரி பஸ் நிறுத்தத்தில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவர், நேற்று காலை மெடிக்கல் ஷாப் திறக்க சரவணன் வந்துள்ளார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கல்லாப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய், மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாக்லேட் மற்றும் உணவு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.