போலீஸ் அதிகாரிகள் 39 பேருக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
போலீஸ் அதிகாரிகள் 39 பேருக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
ADDED : ஆக 15, 2025 01:29 AM

சென்னை:சுதந்திர தின விழாவையொட்டி, மெச்சத்தகுந்த மற்றும் தகைசால் பணிக்காக, 24 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கமும், 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி மற்றும் பொதுச் சேவைக்கான காவல் பதக்கம் மொத்தம், 39 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தகைசால் பணி: பூ.பாலநாகதேவி, கூடுதல் டி.ஜி.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை. க.கார்த்திகேயன், கூடுதல் கமிஷனர், போக்குவரத்து, சென்னை மாநகர போலீஸ்.
சு.லட்சுமி, ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.
மெச்சத்தகுந்த பணி: ஆ.ஜெயலட்சுமி, எஸ்.பி., மாநில மனித உரிமைகள் கமிஷன், சென்னை. இரா.சக்திவேல், துணை கமிஷனர், நுண்ணறிவு பிரிவு, சென்னை மாநகர போலீஸ்.
சு.விமலா, எஸ்.பி., நாமக்கல்.
பொ.துரைபாண்டியன், டி.எஸ்.பி., பாதுகாப்பு பிரிவு, குற்றப்புலனாய்வு துறை, சென்னை.
இவர்கள் உட்பட, 24 போலீஸ் அதிகாரிகளுக்கு, மெச்சத்தகுந்த மற்றும் தகைசால் பணிக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கம்: த.பூரணி, சைபர் குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி., சென்னை.
பி.உலகராணி, இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி., திருநெல்வேலி.
மா.லதா, இன்ஸ்பெக்டர், கடத்தல் தடுப்பு பிரிவு, சி.பி.சி.ஐ.டி., சென்னை.
மு.செந்தில்குமார், இன்ஸ்பெக்டர், மகுடஞ்சாவடி காவல் நிலையம், சேலம் மாவட்டம்.
இவர்கள் உட்பட 10 பேர் இப்பதக்கத்தை பெறுகின்றனர்.
சிறந்த பொதுச் சேவைக்கான முதல்வரின் காவல் பதக்கம்: மகேஷ்வர் தயாள், கூடுதல் டி.ஜி.பி., சிறைத்துறை இயக்குநர், சென்னை.
ஜெ. மகேஷ், டி.ஐ.ஜி., நுண்ணறிவு பிரிவு, உள்நாட்டு பாதுகாப்பு, சென்னை.
நை.சிலம்பரசன், எஸ்.பி., திருநெல்வேலி மாவட்டம்.
கு.பிரவின்குமார், கூடுதல் எஸ்.பி., தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறை, தலைமையகம், சென்னை.
தா.மேரிரஜு, இன்ஸ்பெக்டர், சென்னை மாநகர போலீஸ்.
முதல்வர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.