சீமான் மீது புகார் அளித்த நடிகையிடம் போலீஸ் விசாரணை
சீமான் மீது புகார் அளித்த நடிகையிடம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 27, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருமண ஆசை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம், பெங்களூரு சென்று போலீசார் விசாரித்தனர்.
விஜய் நடித்த, ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. இவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், திருமண மோசடி செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, சீமான் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என, சீமானுக்கு 'சம்மன்' அனுப்பி உள்ளனர். இந்நிலையில், புகார் தொடர்பாக, தனிப்படை போலீசார், கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்று, விஜயலட்சுமியிடம் நேற்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.