எண்ணிக்கையில் குளறுபடி கூடாது; தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
எண்ணிக்கையில் குளறுபடி கூடாது; தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
UPDATED : மே 13, 2024 07:40 PM
ADDED : மே 13, 2024 07:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையமான அரசு பொறியியல் கல்லூரியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கலெக்டர் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஓட்டு எண்ணிக்கையின் போது மற்ற மாவட்டங்களை விட, தகவலை முந்தித் தரும் வேகத்தில், தவறான எண்ணிக்கையை பதிவிட்டு விடக்கூடாது. மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று தூத்துக்குடியில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுரை வழங்கினார்.