பழனிசாமி குறித்த பொன்னையன் 'கமென்ட்' * குலுங்கி குலுங்கி சிரித்த பன்னீர்செல்வம்
பழனிசாமி குறித்த பொன்னையன் 'கமென்ட்' * குலுங்கி குலுங்கி சிரித்த பன்னீர்செல்வம்
ADDED : ஆக 17, 2024 07:18 PM
அவனியாபுரம்:மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
கோல்கட்டாவில் பெண் டாக்டருக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை, படுகொலை, பெண் இனத்திற்கே விடுத்த மிகப் பெரிய சவாலாக மாறி இருக்கிறது.
அ.தி.மு.க., அவசர செயற்குழு எதற்காக கூட்டப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே எங்களுக்கும் அவர்களுக்கும் உயர் நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் நடக்கின்றன. இதற்கிடையில், எந்த கருத்தும் நான் தெரிவிக்க வில்லை. தி.மு.க.,வினரை கடுமையாக விமர்சித்துவிட்டு கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு, அவர்களுடன் சிரித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் இரட்டை நிலைப்பாடு, அவர் நடத்துகிற நாடகத்திற்கு யாரும் விளக்கம் கொடுக்க தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, ராஜாஜிக்கு நிகரானவர்' என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் எதுவும் சொல்லாத பன்னீர்செல்வம் குலுங்கி குலுங்கி சிரித்தபடியே சென்றார்.

