தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 19,500 மெகா வாட்டை தாண்டியது மின் தேவை

19,500 மெகா வாட்டை தாண்டியது மின் தேவை

19,500 மெகா வாட்டை தாண்டியது மின் தேவை


ADDED : ஏப் 06, 2024 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக மின் தேவை தினமும் சராசரியாக பகலில் 15,000 மெகா வாட்டாகவும்; மற்ற நேரங்களில் 16,000 மெகா வாட்டாகவும் உள்ளது. இது, இதுவரை இல்லாத அளவாக, 2023 ஏப்., 20 மதியம் 12:00 மணிக்கு 19,387 மெகா வாட்டாக அதிகரித்தது. பின், வழக்கமான அளவுக்கு குறைந்தது.

இந்தாண்டு மார்ச் முதல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், மின் விசிறி, 'ஏசி, ஏர்கூலர்' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, மார்ச் 22 காலை 11:00 மணிக்கு மின் தேவை, 19,409 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.

இது, அதை விட அதிக அளவாக இம்மாதம் 3ம் தேதி மாலை 3:00 மணிக்கு 19,413 மெகா வாட்; 4ம் தேதி காலை 10:30க்கு 19,455 மெகா வாட்டாக அதிகரித்தது.

நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, எப்போதும் இல்லாத வகையில் 19,500 மெகாவாட்டை தாண்டி, 19,580 மெகாவாட்டாக மின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுதும் அன்று பயன்படுத்திய மின்சார அளவான மின் நுகர்வும், இதுவரை இல்லாத அளவாக 44.11 கோடி யூனிட்களாக அதிகரித்தது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதனால், வீடுகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கும் பகலில் அதிக மின்சாரம் வழங்கப்படுகிறது. அவற்றுடன், ஐ.பி.எல்., கிரிக்கெட், மின் வாகன பயன்பாடு ஆகியவற்றால் மின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது.

அதற்கு ஏற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல் செய்து பூர்த்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மொத்த மின் தேவையில்ஒவ்வொரு பிரிவின் பங்கு


பிரிவு - சதவீதம்
வீடு - 30
வணிகம் - 11
விவசாயம் - 14
தொழிற்சாலை - 38
இதர பிரிவுகள் - 7
மொத்தம் - 100



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us