பிரதமர் மோடி வருகை: ராமேஸ்வரம் ஓட்டல்களில் போலீசார் விசாரணை
பிரதமர் மோடி வருகை: ராமேஸ்வரம் ஓட்டல்களில் போலீசார் விசாரணை
ADDED : பிப் 23, 2025 01:13 AM
ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறக்க வர உள்ளதால் ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கியுள்ளவர்கள் உள்ளிட்ட தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி மார்ச்சில் திறக்க உள்ளார். இதற்காக பாம்பன் பாலத்தில் 3 கட்டங்களாக திறப்பு விழா ஒத்திகை நடத்தப்பட்டது.
திறப்பு விழா ராமேஸ்வரத்தில் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் நடக்க உள்ளது.
பிரதமரின் வருகையால் ராமேஸ்வரம் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய, மாநில பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி இரு நாட்களாக ராமேஸ்வரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஆதார், புகைப்படங்களை போலீசார் சேகரித்து விசாரித்தனர்.
மேலும் விடுதிகளில் அதிக நாட்கள் தங்குபவர்கள் குறித்து தகவல் அளிக்குமாறும் அவற்றின் உரிமையாளர்களிடம் போலீசார் வலியுறுத்தினர்.

