ADDED : செப் 09, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : முதல்வர் ஸ்டாலின், வெளிநாடு தொழில் முதலீடு ஈர்ப்பதற்காக, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிகாகோ நகரில் தங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், முதன்மை செயலர் நேரு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் இணைந்தனர்.
செப்., 15ல் அண்ணாதுரை பிறந்த நாள்; செப்., 17ல் தி.மு.க., முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்டந்தோறும் நடந்து வரும் பொது உறுப்பினர்கள் கூட்டங்களின் விபரங்கள் குறித்தும், முதல்வர் கேட்டறிந்தார். வரும் 2026 சட்டசபை தேர்தல் வியூக பணிகள் குறித்தும், முதல்வர் ஆலோசித்துள்ளார்.