sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விளை பொருளின் விலை சொல்லும் 'செயலி'

/

விளை பொருளின் விலை சொல்லும் 'செயலி'

விளை பொருளின் விலை சொல்லும் 'செயலி'

விளை பொருளின் விலை சொல்லும் 'செயலி'


ADDED : மே 05, 2024 12:50 AM

Google News

ADDED : மே 05, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது தான். பல விவசாயிகளுக்கு பல்வேறு மண்டிகளில் அல்லது ஏபிஎம்சி மார்க்கெட்டுகளில், விளை பொருட்களுக்கு என்ன விலை கிடைக்கும் என்பதையும் அறிய முடிவதில்லை.

'ஓனோ' (ONO) ஒன்ற ஒரு விவசாய தொழில்நுட்ப நிறுவனம், விவசாயிகள், கமிஷன் முகவர்கள், வர்த்தகர்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள், வாங்குவோர் மற்றும் கடன் வழங்குபவர்கள், விவசாய மதிப்புச் சங்கிலியில் பங்கேற்பாளர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய நுண்ணறிவு தரவுகளைப் பெற, ONO குழு இந்தியாவில் உள்ள 675க்கும் மேற்பட்ட APMC-, மண்டிகளுக்குச் சென்று விவசாயிகள் / வர்த்தகர்களின் பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கு பல தீர்வுகளை வழங்கி வருகிறது. இவர்களின் நோக்கம் என்னவெனில், நம் ஒவ்வொருவரின் மேஜைக்கும் உணவைக் கொண்டு வருவதில் கடினமாக உழைக்கும் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி சரியான விலையை பெற தகுதியானவர்கள் என்பது தான்.

இதுதவிர, கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய சுற்றுச்சூழலில் இருப்பவர்களை (கமிஷன் முகவர்கள், வர்த்தகர்கள், வாங்குபவர்கள், டிரான்ஸ்போர்ட் மற்றும் கடன் வழங்குபவர்கள்) ஒன்றிணைத்தல் இந்தியாவின் APMC மற்றும் மண்டி நெட்வொர்க்கில் உள்ள விவசாயிகளுக்கு வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை வளர்ப்பதன் மூலம் விவசாய விநியோகச் சங்கிலி (Supply Chain) ஏரியாவில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், விவசாய சுற்றுச்சூழல் அமைப்பில் நிலவும் முக்கியமான சவால்களை எதிர் கொள்ளும் நோக்கில் டேட்டா சார்ந்த டிஜிட்டல் மயமாக்கல் தளத்தை உருவாக்கியுள்ளது. முறையான கடனுக்கான அணுகல், பொருட்களுக்கு விலை பற்றிய தகவல்கள், Market Discovery போன்றவைகளில் உதவுகிறது.

7 நாள் வரை விலை


மண்டி மற்றும் APMCகள் முழுவதும் நிகழ் நேர விலைகளை அறியவும் ஒப்பிட்டுப் பார்க்கவும், 5 பயிர்கள் வரை தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் கடந்த, 7 நாள் வரையிலான விலை நிலவரங்களையும் அறியலாம். இதுதவிர, நிகழ்நேர அறிவிப்பை பெற பயிர் மற்றும் விலை விழிப்பூட்டல்களை நீங்கள் இந்த செயலியில் அமைத்து கொள்ளலாம். அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்த பயிர்களுக்கான விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

4 வகை செயலிகள்


விவசாயிகளுக்கான பயிர் விலை மற்றும் மண்டிகளை கண்டறிய 'ஓனோ கனெக்ட்' (Ono Connect), கமிஷன் முகவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான மண்டி சாஸ் தளத்துக்கு 'ஓனோ கிளிக்' (Ono Click), -வர்த்தகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களுக்கான ஒரு நடுத்தர மைல் வர்த்தக தளமாக, 'ஓனோ மண்டி' (Ono Mandi), விவசாயிகள், கமிஷன் முகவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான கடன் வழங்கும் தளம், 'ஓனோ கேஷ்' (Ono Cash). இவற்றில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

இணையதளம்

சந்தேகங்களுக்கு

இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com



அலைபேசி: 98204 51259

இணையதளம்: www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us