ADDED : ஜூலை 01, 2024 03:13 AM
முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கையில் மது, போதைப்பொருட்கள் பயன்படுத்த கூடாது. அவற்றை விற்றால் போலீசாரிடம் பிடித்து கொடுக்கப்படும் என கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கோயில், பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகின்றன. மது, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களால் பிரச்னைகள் வந்து விடக்கூடாது என்பதற்காக தடை விதிக்க வேண்டும் என பெண்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனையடுத்து கிடாத்திருக்கையில் நேற்று ஊர் கூட்டம் நடந்தது. இதில் சட்டவிரோதமாக மது, கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் ஊர் மக்கள் சார்பில் விற்பனை செய்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மற்ற கிராமங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.