ADDED : ஜூலை 08, 2024 11:41 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடந்ததால் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் கோயில் தெற்கு ரதவீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரத்தில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கோயில் எஸ்.ஐ., அருள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அறையில் காத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 34 வயது பெண், புதுக்கோட்டையை சேர்ந்த 40 வயது பெண், உடந்தையாக இருந்த விடுதி உரிமையாளர் செல்லமுத்து 63, ராமநாதபுரம் பெண்ணின் கணவர் பாலமுருகன் 40, ஏஜென்டாக இருந்த காளிதாஸ் 35, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தெற்கு ரதவீதியில் உள்ள இந்த தங்கும் விடுதியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக ஹிந்து அமைப்பினர் பலமுறை புகார் செய்த நிலையில் தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

