ஆணைய நிகழ்ச்சியில் பிரசாரம்; தி.மு.க.,வினர் மீது வழக்கு
ஆணைய நிகழ்ச்சியில் பிரசாரம்; தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஏப் 07, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில், உலக சாதனை வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள், நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.
குத்துக்கல்வலசையை பேரணி நெருங்கிய போது, தி.மு.க.,வினர் பிரசார வாகனத்தை நிறுத்தி உதய சூரியனுக்கு ஓட்டுக்கேட்டு, அக்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
இந்த வீடியோ பரவிய நிலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடிய பொதுமக்களிடம் தி.மு.க.,வினர் எப்படி பிரசாரம் செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் புகாரின்படி, தென்காசி போலீசார் தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

