ADDED : ஜூலை 11, 2024 07:27 AM

சென்னை : தமிழக பா.ஜ.,வின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு தலைவர் ராமன் நேற்று அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராணுவ வீரர்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். ராணுவத்தில், இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பணியாற்றக்கூடிய 'அக்னிபாத்' திட்டம் சிறந்த திட்டம். அத்திட்டத்தில் வேலைக்கு சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், காஷ்மீரில் உயிரிழந்து விட்டார். அவருக்கு நிதியுதவி அளிக்கவில்லை என, ராகுல் பொய் பிரசாரம் செய்தார்.
இதற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, 98 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், மேலும், 67 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை, உயிரிழந்த வீரரின் தந்தையே தெரிவித்து விட்டார். ஆனாலும், காங்கிரஸார் தொடர்ந்து பொய் சொல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில், ராணுவத்திற்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோடி அரசில், 6.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.